கொள்கைகள்
-
தெரிந்து கொண்டு மற்றையவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது
-
இயன்ற அளவு நோ்மையாக இருக்கவேண்டும். தவிர்க்க முடியாத இன்றியமையாத இடங்களில் குறுக்கு வழிகள் செல்வாக்கு பயன்படுத்துவது தப்பில்லை.அது நன்மையான விடயத்துக்கானதாயிருக்கவேண்டும்
-
திருந்திவாழ மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.அதற்காக செய்துவிட்டு பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டேயிருப்பதை பிழைப்பாக கொண்டவர்களை மன்னிக்க முடியாது
-
வித்தியாகர்வம் இருப்பதை யாரும் பிழையாக கொள்ள முடியாது
-
நான் ஓரு ஞானியல்ல 100 சதவிகிதம் உண்மையாக இருப்பதற்கு…ஆனால் நல்ல மனிதனாக வாழ விரும்புகிறேன்
-
மற்றவர்களின் சுதந்திரத்தினை பறிக்க விரும்பவில்லை ஆயினும் எனது சட்டத்தில் பிழையென்று பட்டதை நேரடியாக சொல்ல விரும்புகின்றேன் ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பு வெறுப்பு.
-
ஒருவருடைய வன்முறையற்ற திறமையினால் அல்லது அரசியல் அணுகுமுறையின் மூலம் மற்றவர்களினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதை 100 சதவீதம் பிழையானது என நான் எண்ணவில்லை இது பிரயோகிப்பவரின் திறமையினை வெளிப்படுத்துகிறதுடன் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதையும் கூறிநிற்கிறது
-
வன்முறையினை வன்முறையினால் தான் வெல்லமுடியும் என்றாலும் அகிம்சை வழியினை முதலில் பின்பற்றவேண்டும்.
-
நிராயுதபாணியினை வன்முறையினை பிரயோகிப்பதன் மூலம் அடக்குவதை அனுமதிக்க முடியாது.
-
என்முன் நடக்கும் அக்கிரமங்களை பார்த்தும் பாராமலிருக்க மனமில்லை எனது எதிர்ப்பு அவ்விடத்தில் இருக்கும் ஆனால் அதன் வடிவம் மாறுபட்டது
-
நான் எனது ஆயுட்காலம் வரை உயிர்வாழ விரும்புகிறேன் ஆனால் மரணத்தினை கண்டு பயம்கொள்ளவில்லை. அதற்காக சாவு நிச்சயம் என்று தெரிந்து கொண்டு தலையினை நீட்ட தயாரில்லை.அது வரும்போது வரட்டும் வாழும்வரை வாழுவோம்
-
மற்றவரின் சுதந்திரத்திற்கு தடையின்றி நான் சுயநலக்காரனாக இருக்கலாம்.
-
மற்றவர்கள் என்னுடைய வேலைகளை அட்டவணைப்படுத்துவதையோ முடிவு செய்வதையோ நான் விரும்பவில்லை.எனது வேலைகளை நானே செய்ய விரும்புகின்றேன் .அது என்னால் முடியும் என்றும் நம்புகின்றேன்.சிலவேளைகளில் இக்கொள்கைக்காக நான் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது
-
மற்றவர்கள் என்மீது பிழை சொல்வதை நான் விரும்பவில்லை ஆயினும் எந்த வழியிலேனும் நான் செய்தது பிழைதான் என்று தெரியவரும்பொது அதனை ஏற்றுக்கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் தயாராயிருக்கிறேன் எனவே பிழையினை கண்டுபிடித்து எடுத்துரைப்பவரின் திறமையினை பொறுத்தது.மேலோட்டமாக எனது சட்டத்தில் நான் செய்தது சரியே.
-
திட்டமிட்டு காரியங்களை செய்யவேண்டும் .தொடங்கி அரைகுறையில் நின்று ஏன் என சிந்திப்பது முட்டாள்தனம். எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வள்ளுவன் வாக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்
-
கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு அதற்காக கோயிலுக்கு சென்றால் தான் கடவுள் உண்டு என்று கூறுவதை மறுக்கிறேன் விரும்பினால் போவேன். நாத்திகம் பேசுபவர்கள அவர்கள் அப்படி பேசும்போது மட்டும் பிடிக்காது.
-
நான் வணங்குவது மட்டும்தான் கடவுள் என்று நான் நம்பவில்லை.ஆனால் எம்மைமீறிய சக்தி ஒன்று மட்டும் உண்டு அதனை வணங்கலாம் அதற்கு கடவுள் என்று பெயரிடலாம் விரும்பிவாறு கொள்கைகள் வகுத்து விரும்பிய வகையில் வணங்கலாம் ஆயினும் என்னைப்பொறுத்த வரையில் எல்லா மதங்களையும் மதிக்கின்ற போதிலும் இந்து மதமே சிறந்தது என கூறுவேன்.இந்து மதம் கடவுளை வழிபட வகுத்த கொள்கைகள் சிறந்தது எனக் கூறுகிறேன். எனவே மதம் மாறுபவர்களை அவர்கள் மதம் மாறும்வேளையில் எனக்கு பிடிக்காது.மதம்மாற்ற முயல்பவர்களை எப்போதுமே பிடிக்காது.
-
சமூகத்துடன் ஒத்துழைத்து விட்டக்கொடுத்து வாழ விரும்புகிறென் அதற்காக என்னை முழுமையாக சமூகத்துக்காக மாற்ற விரும்பவில்லை.
-
என்னைக்கண்டு பணிந்துபோவதை நான் விரும்பவில்லை ஆயினும் அவர்களின் உண்மையான பணிவுக்கு மரியாதை கொடுக்க தவறமாட்டேன்.
-
பொது வாழ்வில் என்னுடைய கருத்துக்கு மற்றவர் அடங்கவேண்டும் என நினைக்கவோ விரும்பவோ இல்லை. இசைந்தால் மகிழ்ச்சி்.
-
நான் நிறுவனத்தின் அல்லது நடவடிக்கையின் ஒரு தலைவனாக இருக்கும்போது மட்டும் இவ்விடத்தில் சிலமாற்றங்கள் நிகழும்.என்னுடைய அட்டவணை கட்டாயமாக நிறைவேற்றப்படவேண்டும் என்னுடைய இலக்கைநோகிய விருப்புக்கள் திருப்திசெய்யப்படவேணடும் அல்லது எனது தலைமையில் இருந்து மற்றவர்கள் விலகவேணும்
-
ஒரு குடும்பத்துக்கு யாரும் தலைவனாக நான் கருதவில்லை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் நிச்சயம் அது சிறப்பாக அமையும்.
-
உரிமைகள் தரப்படமுடியாதவை அவை எடுத்தக்கொள்ளப்படவேண்டியவை. அதேவேளை அவை பறிக்கப்படுவதற்கு சாத்தியமுண்டு அவரவர் உரிமைகளை அவரவர் பாதுகாக்கவேண்டும்
-
மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பத்தயாரில்லை.அவை உண்மையில்லை என்று எடுத்து எனது சட்டத்தில் ஆராயப்பட்டு அங்கு உண்மையென்றாலேயெ உண்மை.
-
எதிர் விவாதம் செய்பவர்களை எனக்கு பிடிக்கும்.தமது பிழையினை மறைக்க விவாதிப்பவர்களை பிடிக்காது.
-
முற்போக்கான எண்ணங்களை வரவேற்கிறேன் தம்மைப்பிரபல்யப்படுத்துவதற்காக மட்டுமே விதண்டா வாதம் செய்வது நல்லது என்று நினைக்கவில்லை
-
சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களில் 100 வீதம் சரியானதென்றோ 100 விதம் பிழையானதன்றோ கருதவில்லை அவற்றிலும் பல உண்மைகள் இருக்கின்றன சில மருவியதன்காரணமாக மூடநம்பிக்கைககளாக மாறிவிட்டன.
-
விரதமிருப்பது போன்ற செயல்களினால் கடவுளின்பெயரால் தம்மைத்தாமே வருத்துவதை அடியொடு வெறுக்கிறேன் அதற்காக நான் அவர்களை நான் என்ன செய்ய முடியும்?. பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது
-
புதிய தொழிநுட்பங்களை வரவேற்கிறேன் இவற்றை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றேன்.விஞ்ஞான உலகை வியப்பாக பார்க்கிறேன் அவர்களின் சேவையினை மதிக்கிறேன்
-
புதுமைப்புரட்சியினூடாக பழமை பாதுகாக்கப்படவேண்டும் என விரும்புகிறேன்
-
எமது தமிழ் கலை கலாச்சராங்கள் உயரந்தவை அவை பாதுகாக்கப்படவேண்டும் அவை சிரழிக்கப்படக்கூடாது.
-
காதல் என்பது எதிர்பார்ப்புக்களுடன் இருக்கக்கூடாது என்றும் அது திட்டமிடப்பட்டதாக இருக்கக்கூடாது என்றும் நினைக்கின்றேன்
-
காதலுக்கும் விருப்பு என்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது என நம்புகின்றேன்
-
உண்மையான காதலுக்கு மரியாதை செய்கிறேன்.சொல்லாமல் விட்ட அல்லது வெளிப்படுத்தாத காதல் மீட்டாத வீணைக்கு சமம் என்பதுடன் 100 வீதம் உடன்படுகின்றேன்
-
நவீனத்தின் பெயரால் கலாசாரங்கள் பாதிக்கப்படுவவதயும் அளவுக்கு மிஞ்சிய செயற்கைத்தனமான ஆட்ம்பரங்களை வெறுக்கின்றேன்
-
எப்போதும் எல்லாரிடமும் வெளிப்படையாக இருக்க முயற்சிக்கிறேன்.ஆயினும் சில இடங்களில் பேசாதிருப்பது மேல். இரகசியங்களை காக்க வேண்டிய இடத்தில் காக்க வேண்டும்
-
என்னால் முடிந்த அளவுக்கு மட்டும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய விரும்புகின்றேன் எனது உதவியின் விளைவு பற்றி அறியும் ஆவலுடன் இருப்பேன்
-
மனமுவந்து கொடுத்த பொருளை மீள பெற்றுக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை
-
கொடுக்கும்போது முடிந்தஅளவுக்கு கூடியதாக ருக்கவேண்டும் என விரும்புகின்றேன்
-
என்னைப்பற்றிய பிழையான அபிப்பிரயங்களை நீக்குவதற்காக குறைந்த நேரத்தினை செலவழிக்கவே விரும்புகிறேன்
-
என்னில் நம்பிக்கை வைத்து தரப்படும் வேலையினை என்ன விலைகொடுத்தும் செய்யத்தயாராயிருக்கிறேன்.வந்தவரை இலாபம் என்ற போக்கில் என்னை உபயோகிப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது
-
கல்நெஞ்சம் ஒரு மனிதனுக்கு சிறிதளவாவது இருக்கவேண்டும்.100 வீதம் இளகிய மனம் கொண்டவர்களினை நான் ஏமாளிகளாகவே பார்க்கிறேன்
-
தோல்விகளை சந்திப்பதற்காக நான் துவழவில்லை.அளவாக வருத்தப்படுகிறேன் வெற்றிதான் எனது இலட்சியம்
-
வெளிப்படையாக முகத்துக்கு நேரே பேசுபவர்ளை எனக்கு மிகவும் பிடிக்கும்
-
வேலைகள் எதையும் சரியான திட்டமிட்டு செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்
.